தர்பியா வகுப்பு - பிளவக்கல் டேம் பள்ளிவாசல்

இன்ஷா அல்லாஹ்..

செப்டம்பர் 30 அஸரிலிருந்து அக்டோபர் 01 லுஹர் வரை இரண்டு நாள் தர்பியா வகுப்பு, பிளக்கம் டேம் பள்ளிவாசலில் வைத்து லஜ்னத்துல் இஹ்ஸான் உலமா சபை மற்றும் ஹிதாயத்துல் இஸ்லாம் நற்பணி மன்றம் சார்பாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வகுப்பின் சிறப்பு விருந்தினராக கோவையைச் சேர்ந்த மார்க்க அறிஞர், இஸ்லாமிய எழுத்தாளர் மௌலவி அப்துர் ரஹ்மான் உமரி அவர்கள் வர இருக்கிறார்கள். இவர் தமிழில் மொழியாக்கம் செய்த குர்ஆன் ஆய்வுரை 'ததப்புருல் குர்ஆன்' பரவலாக பேசப்பட்டது.

உபதேசங்கள் அறிவுரைகள் என மக்களை சலிப்படையச் செய்யும் வகையில் இந்த வகுப்பு இருக்காது. மார்க்க விளக்க வகுப்புகள், கலந்துரையாடல்கள், கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் பவர்பாய்ண்ட் ப்ரசன்டேசன் என வகுப்புகள் பிரிக்கப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற இருக்கிறது.

உலக விசயங்களுக்காக மணிக்கணக்கில் செலவிடும் நாம், மார்க்க விசயங்களைத் தெரிந்துகொள்ள, இவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் வகுப்புகளிலும் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுவோம்!

இந்த அரிய நிகழ்வில் மூன்றூர் மாணவர்களும் இளைஞர்களும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்

HIYWA இளைஞர் மன்றம், MTK புரம்

Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA