டெங்கு விழிப்புணர்வு & நிலவேம்புக் கசாயம்

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் நமது ஹிதாயத் மன்றத்தின் முதல் நற்பணி "டெங்கு விழிப்புணர்வு & நிலவேம்புக் கசாயம் வழங்குதல்" நிகழ்ச்சி திட்டமிட்டபடியே 15-9-2017 ஞாயிறு அன்று சிறப்பான முறையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
சனிக்கிழமை அன்றே நிகழ்ச்சிக்கான ஃப்ளெக்ஸ் பேனர், பிட் நோட்டீஸ், கசாயம் தயாரிப்பதற்கான நிலவேம்புப் பொடி என அனைத்தையும் பொறுப்பேற்றுக் கொண்டார் நமது மன்றத்தின் துணைத்தலைவர் அப்துஷ் ஷுக்கூர் அவர்கள். மறுநாள் காலையில் அப்துஷ் ஷுக்கூரின் வீட்டில் வைத்தே கசாயம் காய்ச்சும் பணி செய்யப்பட்டு நமது உள்ளூர் மன்ற உறுப்பினர்களால் ஊர் முழுக்க ஆட்டோவில் நிலவேம்புக் கசாயத்தை விநியோகம் செய்யப்பட்டது. அதே போல டெங்குவைப் பற்றிய விழிப்புணர்வும் மெகாபோனில் பரப்புரை செய்யப்பட்டது. ஆட்டோ கொடுத்து உதவிய நமது மன்ற உறுப்பினர் முஹம்மது தாரிக் அவர்களுக்கு ஜஸாக்கல்லாஹு கைர்.
இந்த நிகழ்வு இவ்வளவு தூரம் சிறப்பாக நடந்து முடிந்ததற்கு முக்கிய காரணம் நமது மன்றத்தின் உள்ளூர் உறுப்பினர்கள்தான்..
அப்துஷ் ஷுக்கூர்
துவான் (பண்ணையார்)
ஹாரிஸ் முஹம்மது
பீர் முஹம்மது (கி.புரம்)
அப்துல் குத்தூஸ்
பாதுஷா (அக்ரி)
சிக்கந்தர் (B.Sc Nursing)
ஷேக் (அக்ரி)
ஷேக் (S/o மைதீன் பாவா)
சாதிக் (S/o காதர்)
ஷேக் (B.Sc Physics)
வலியுல்லாஹ் ஹஜ்ரத்
முபாரக் ஹஜ்ரத்
O.M. ஷேட்
சையது இப்ராஹிம்
ஃபரீத் (பணத்தோட்டம்)
தாஜ் (பணத்தோட்டம்)
ஜாவித் (S/o ஜாஃபர் அலி)
அவர்களுடைய பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!
மேலும் இதுபோன்ற நற்பணிகளைத் தொடர்ந்து செய்யவும், அதில் உறுதியாக இருக்கவும் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போமாக!
இவண்
ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம், MTK புரம்































Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA