வாட்ஸப் மசூரா - HIYWA
செய்முறையும் விதிமுறைகளும்:
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
1. முதலில் இன்ன தேதியில் இன்ன நேரத்தில் வாட்ஸப் மசூரா நடைபெற இருக்கிறது என அறிவிப்பு வரும்.
2. குறித்த தேதியில் நேரத்தில் மசூரா ஆரம்பிக்கப்படடவுடன், மசூராவில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், உங்களுடைய விருப்பத்தை பதிவு செய்ய "✋" என்று அனுப்ப வேண்டும்.
3. பின்பு மசூராவில் உள்ள அனைவரிடமும் "யாரை இந்த மசூராவிற்கு அமீராக நியமிக்கலாம்?" என்று கருத்து கேட்கப்படும். அதிகமான வாக்குகளைப் பெறுபவர் இந்த மசூராவிற்கு 'அமீராக' நியமனம் செய்யப்படும்.
4. அமீர் மசூராவை ஆரம்பித்து வைத்து 'என்ன தலைப்பில் விவாதிக்கப் போகிறோம்' என்பதை விவரிப்பார்.
5. பின்பு ஒருவர் பின் ஒருவராக அவருடைய பெயரைக் குறிப்பிட்டு கருத்துக் கேட்கப்படும். ஒருவர் தன்னுடைய கருத்தை கூறி முடிக்கும் வரை அடுத்தவர்கள் யாரும் பேசக்கூடாது. உங்களுடைய பெயர் வரும் போது மட்டும் உங்கள் கருத்துக்களை கூற வேண்டும்.
6. உங்களுடைய கருத்துக்கள் வழவழ கொழகொழ என்று இல்லாமல், நறுக்கென்று நான்கு வரியில் சொல்லுங்கள்.
7. ஒரு சுற்று முடிந்தவுடன் "சுற்று முடிந்துவிட்டது" என அறிவிப்பு வரும். அதற்கிடையில் யாரேனும் தான் இன்னொரு கருத்து சொல்ல வேண்டும் அல்லது தன்னுடைய கருத்தை மாற்ற வேண்டும் என விரும்பினால் "✋" என்று அனுப்ப வேண்டும். அவருக்கு அப்போது வாய்ப்பு வழங்கப்படும்.
8. மசூராவில் அனைவருடைய கருத்துக்களையும் முழுமையாகவும் கவனமாகவும் 'அமீர்' கேட்க வேண்டும். அனைவரும் தங்களுடைய கருத்துக்களை கூறி முடித்த பின்பு அமீர் இறுதி முடிவாக தன்னுடைய கருத்தைக் கூறுவார். அமீருடைய முடிவை சம்பந்தப்பட்டவரும் மற்றும் மசூராவில் கலந்துகொண்ட அனைவரும் ஏக மனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் சுன்னத்தான முறை.
9. சம்பந்தப்பட்ட தலைப்பில் மசூரா முடிந்தவுடன் 'கஃப்பாரா' துஆ ஓதி மசூரா முடிக்கப்படும்.
10. இந்த விதிமுறைகளை நீங்கள் பின்பற்றினால், மசூரா தெளிவாகவும் முறையாகவும் இருக்கும். அனைவருக்கும் விளங்களவும் செய்யும். ஓவர்லேப் ஆகாது.
11. மசூராவில் கலந்துகொள்ள விருப்பமில்லாத நபர்கள் தயவுசெய்து அமைதி காக்கவும். இடையில் குறுக்கிட வேண்டாம்.
12. மன்ற உறுப்பினர்களில் யாராவது ஒருவர் இந்த மசூராவை ஒருங்கிணைப்புச் செய்து வழிநடத்துவார்.
இவண்
HIYWA
Comments
Post a Comment