சுகாதார விழிப்புணர்வு மற்றும் பரப்புரை
அல்ஹம்துலில்லாஹ்!
கடந்த ஞாயிறு (5-11-17) அன்று அஸருக்குப் பின்பு நமது ஊரில் சுகாதார விழிப்புணர்வு மற்றும் பரப்புரை Hiywa மன்றம் சார்பாக நடைபெற்றது. ஊரில் இருந்த மன்றத்தார்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி&கிரஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரப்புரையை மேற்கொண்டனர். இதில் ஒவ்வொரு வீடாகச் சென்று சுகாதார விழிப்புணர்வு பற்றிய துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டு தூய்மையைப் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் மெகாஃபோன் மூலமாக பரப்புரையும் மேற் கொள்ளப்பட்டது.
இந்தப் பரப்புரையில் கலந்துகொண்ட மன்றத்தார்கள்.,
1. அப்துஷ் ஷுக்கூர்
2. பீர் முஹம்மது
3. அஹமது
4. முஹம்மது யாஸிர்
5. துவான்
6. ஜாவித்
7. தாஜ்
2. பீர் முஹம்மது
3. அஹமது
4. முஹம்மது யாஸிர்
5. துவான்
6. ஜாவித்
7. தாஜ்
8. அப்துல்லாஹ்
நம்முடைய நற்பணிகளை பொருந்திக் கொள்வானாக! மேலும் இதுபோன்ற நற்பணிகளை மேற்கொள்ள இறைவன் தவ்ஃபீக் செய்வானாக!
ஆமீன்!
இவண்,
ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம், MTK புரம்









Comments
Post a Comment