நல்லொழுக்கப் பயிற்சி & குறும்படம் திரையிடல்

அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த ஞாயிறு (5-11-17) மஃரிப் தொழுகைக்குப் பின்பு நமது ஊர் மாணவர்களுக்கு, HIYWA மன்றம் சார்பாக நல்லொழுக்கப் பயிற்சி மற்றும் குறும்பட திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வு மவ்லவி கே. ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரி அவர்களின் வாழிகாட்டுதலின்படி கடந்த இரண்டு மாத காலமாக அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஜாவித் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். பின்பு மன்றத்தின் துணைத் தலைவர் அப்துஷ் ஷுக்கூர் அவர்கள் "Nature & Nurture" என்ற தலைப்பின் கீழ் அரை மணி நேரம் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தார். பின்பு "உயிரினும் மேலான நபிகள் நாயகம்" மற்றும் "மக்கா வரலாறு" ஆகிய குறும்படங்கள் ப்ரோஜெக்டர் மூலமாக மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இஷா தொழுகையோடு இந்த நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மன்றத்தார்கள்.,

1. அப்துஷ் ஷுக்கூர்,
2. துவான் பண்ணையார்
3. பீர் முஹம்மது
4. பாதுஷா
5. யாஸிர்
6. நாகூர்
7. சாதிக்
8. அப்துல் குத்தூஸ்

இதுபோன்ற நல்லொழுக்கப் பயிற்சி நிகழ்வு தொடர்ந்து நடைபெற இறைவனிடம் பிரார்த்திப்போமாக! நம்முடைய நற்பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

ஆமீன்!

இவண்,

ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம், MTK புரம்






Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA