தலைவர் அறிக்கை - 2
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வழிகாட்டி நிகழ்ச்சி சம்பந்தமான ஒரு விளக்கம்
அஸ்ஸலாமு அலைக்கும்
09-12-2017 அன்று நடைபெற்று வாட்ஸப் மஷூராவில், நமதூர் மாணவ மாணவியர்களுக்கு அரசுத் தேர்வுகள் சம்பத்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இரண்டு மணிநேரம் நமதூரைச் சேர்ந்த அரசு பட்டதாரிகளை வைத்து 17-12-2017 அன்று நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் நாம் பேச்சாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்ட போது, ஈரோட்டில் *ஜாஹிர் உசேன்* எனும் பேச்சாளரைப் பற்றி தெரிந்துகொண்டு அவரை அணுகினோம். அவருடைய ப்ரொஃபைல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அவருடன் நமது மன்ற நிர்வாகிகள் அப்துஷ் ஷுக்கூர் மற்றும் முஹம்மது யாஸிர் ஆகியோர் பேசியதன் அடிப்படையில், அவர் *புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தொழில் ஏற்றுமதி பிரிவின் ஆலோசகராக* இருக்கிறார். நூற்றுக்கணக்கான இதேபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்தியிருக்கிறார். மேலும் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி வகுப்புகள் நடத்தி அதன்மூலம் பல பெண்கள் சுயதொழில் தொடங்கி நல்ல நிலமைகளில் இருப்பதாக எங்களுக்குத் தெரியவந்தது. ஆகையால் இவரை நாம் நல்ல முறையில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. 2 மணி நேர நிகழ்ச்சியில் நாம் இதை நடத்த முடியாது எனவே ஒருநாள் நிகழ்ச்சியாக இதை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையிலேயே நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்த மாற்றங்கள் அனைத்தும் இந்த வாரம் புதன்கிழமை இரவு இறுதி செய்யப்பட்டு விட்டது. வெள்ளிகிழமை ஜும்ஆ தொழுகையில் மூன்று ஊர்களிலும் நோட்டீஸ் விநியோகம் செய்து அறிவிப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. செய்யப்பட்ட மாற்றங்கள் அனைத்தையும், வியாழன் அன்று ஒரு மஷூரா கூட்டி அதில் விவாதித்த பின்னர் இறுதி செய்வோம் என திட்டமிட்டோம். ஆனால் கடைசி நேரத்தில் சில காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டு விட்டது. இதன்பின்பு மஷூரா கூட்டப்பட்டு, ஏற்கனவே செய்யப்பட்ட மாற்றங்களில் மேலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நிகழ்ச்சி நடத்துவதில் மீண்டும் தாமதம் ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு மஷூரா கூட்டப்படவில்லை. அதற்குப் பதிலாக, செய்யப்பட்ட மாற்றங்கள் மட்டும் நிர்வாகிகள் குழுவில் புதன்கிழமை இரவு தெரிவிக்கப்பட்டது. இதற்காக எங்களுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிர்வாகிகள் குழுமத்தில், செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து விவாதிக்காமல், எப்படி நீங்களாக முடிவு செய்யலாம் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப் பதிவு. எங்களுடைய நோக்கம் அதுவல்ல. கால சூழ்நிலையால் இந்த மஷூராவை எங்களால் கூட்ட முடியவில்லை. அதற்காக மீண்டும் எங்களுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறோம்!
இந்த நற்பணிக்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பும் ஆதரவையும் முழுமையாகத் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த நிகழ்விற்கு செய்யப்பட வேண்டிய வேலைகள்:
1. அதிகபட்சம் 100 பேருக்கான மதிய உணவு
2. அதிகபட்சம் 150 பேருக்கான கையடக்க நோட்புக் மற்றும் பேனா
3. அதிகட்சம் 150 பேருக்கான டீ மற்றும் ஸ்நாக்ஸ்
4. மைக் செட் ஒருநாள் வாடகை
5. சிறப்புப் பேச்சாளருக்கான நன்கொடை
6. LCD ப்ரொஜெக்டர் ஒருநாள் வாடகை
7. க்ரூப் தேர்வுகளுக்கான புத்தகங்கள்
8. நிகழ்ச்சி சம்பந்தமான பிட் நோட்டீஸ்
மேற்கண்ட மொத்த வேலைகளுக்கும் தோராயமாக கணக்கிடப்பட்டுள்ள தொகை ₹25,000.
இதற்கு முன் நடைபெற்ற நற்பணிகளுக்கு நீங்கள் எவ்வாறு பணமாகவும், பொருளாகவும், உடல் உழைப்பாலும் பல்வேறு வகையில் ஒத்துழைப்பு கொடுத்தீர்களோ, அதேபோல இந்த நற்பணிக்கும் தாராளமாக உங்களால் முடிந்த அளவு நன்கொடைகளை வாரி வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். மேலும் உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி எடுத்துக் கூறி நன்கொடைகள் பெற முயற்சி செய்யுங்கள்.
இவண்
மௌது ஞானியார்,
மன்றத் தலைவர், HIYWA
Comments
Post a Comment