மஷூரா | மன்ற ஆலோசனைக் கூட்டம் | 20-01-2018 | விவரக் குறிப்புகள்
அல்லாஹ்வுடைய கிருபையால் கடந்த சனிக்கிழமை (20-01-2018) அன்று மன்றத்தின் மூத்த உறுப்பினர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட மன்ற ஆலோசனைக் கூட்டம், இஷா தொழுகைக்குப் பின்பு மகாராஜபுரம் பள்ளிவாசலில் வைத்து சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற்ற விஷயங்களும், எடுக்கப்பட்ட தீர்மானங்களும் பின்வருமாறு:
1. ஆலோசனைக் கூட்டம் சரியாக 09:15 மணிக்குத் துவங்கியது.
2. கிட்டத்தட்ட 35 பேர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
3. சகோ. இல்யாஸ் அவர்கள் மன்றத்தின் வரலாறு, இன்றைய நிலவரம் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மன்றத்தின் பைலாவில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு நோக்கங்களையும் ஒவ்வொன்றாக விளக்கிக் கூறினார்.
4. உறுப்பினர்களிடம் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அதன்படி ஒன்பதாவது நோக்கமாக "பொது சேவை மையம்" என்ற நோக்கம் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தை சகோ. உசேன் (வெல்டிங்) அவர்கள் முன்வைத்தார்கள். இந்தப் பொது சேவை மையம் மூலம், நமதூர் மக்களுக்கான வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, முதியோர் உதவித் தொகை போன்ற அரசாங்க டாகுமெண்ட்கள் சம்பந்தமான அனைத்து வகையான உதவிகளும் செய்யப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
5. மாதத்திற்கு ஒருமுறை இதற்கான சிறப்பு முகாம் ஒன்று நடத்துவது எனவும், அதற்கு ஸ்டார் மொபைல்ஸ் உரிமையாளர் சகோ. அய்யூப் கான் அவர்களை பொறுப்புதாரியாக நியமிக்கப்பட்டுள்ளது. இவருக்கு உதவியாளராக சகோ. நாகூர் அவர்களும், மேற்பார்வையாளராக சகோ. உசேன் (வெல்டிங்) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
6. நிர்வாகத்தில் திருத்தம் கொண்டு வருவது சம்பந்தமாக கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதனடிப்படையில் ஆலோசனைக்குழுத் தலைவராக சகோ. ஷம்சுத்தீன் அவர்களும், செயற்குழுத் தலைவராக சகோ. துவான் மைதீன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
7. மேலும் மகாராஜபுரம் உறுப்பினர்களிடம் சந்தா வசூலிக்கும் பொறுப்பபுதாரியாக சகோ. தாரிக் (ஆட்டோ) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
8. நிர்வாகம் தேர்ந்தெடுக்கும் முறை மஷூராவின் அடிப்படையில் அல்லாமல், ஓட்டுச் சீட்டு முறையில் நடைபெற வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதனடிப்படையில் இன்ஷா அல்லாஹ், பைலாவில் மாற்றம் கொண்டு வரப்பட இருக்கின்றது.
9. மன்றத்திற்குச் சொந்தமான சேர்களை நிர்வகிக்கும் பொறுப்பை மகாராஜபுரம் பள்ளிவாசலின் இமாம் ஷாகுல் ஹமீது ஹஜ்ரத் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு உதவியாக சகோ. ஷேக் S/o மைதீன் பாவா மற்றும் சகோ. அஸார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
10. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பின்பு ஊரில் உள்ள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்டு மன்ற ஆலோசனைக் குழுத் தலைவர் சகோ. ஷம்சுத்தீன் அவர்களின் தலைமையின் கீழ் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் மகாராஜபுரம், தம்பிபட்டி மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய மூன்று ஊர்களிலும் மாறி மாறி நடைபெறும்.
மஷூராவின் சில வீடியோ க்ளிப்புகள் கீழே
இந்த மஷூராவில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டு அதன்படி நடக்க அருள்புரிவானாக!
இவண்
HIYWA
HIYWA










Comments
Post a Comment