பொது e-சேவை முகாம் - HIYWA
இந்த மாதம் 11-2-2018 அன்று மகாராஜபுரம் பள்ளிவாசலில் வைத்து நடைபெற்ற HIYWA மன்றத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், 25-02-2018 அன்று நமது ஊரில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் ' பொது e-சேவை முகாம் ' நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் நேற்று இந்த முகாம், நமது மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களால் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்! இந்த முகாமில், ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பது, ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல், ஒரிஜினல் டாக்குமெண்ட்கள் நகலெடுத்தல், லேமினேட் செய்தல், புகைப்படம் எடுத்தல் ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக செய்து கொடுக்கப்பட்டது. காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட முகாம் இரவு 8 மணி வரை நடைபெற்றது. இந்த முகாம் நடைபெறுவதற்குத் தேவையான உபகரணங்கள் வழங்கியது மட்டுமல்லாமல், ஒருநாள் முழுக்க முகாமில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்த ' ஸ்டார் மொபைல்ஸ் ' சகோ. அய்யூப் கான் அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! இன்ஷா அல்லாஹ் ...