நபிகள் நாயகம் - வாழ்க்கை வரலாற்றுத் தேர்வு
லஜ்னத்துல் இஹ்ஸான் உலமா சபை சார்பாக, கடந்த ரபிய்யுல் அவ்வல் மாதம், நமதூர் மாணவ மாணவிகளுக்கு "அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்)" என்ற 460 பக்கங்களைக் கொண்ட புத்தகம் கொடுக்கப்பட்டது. அந்தப் புத்தகத்தை முழுமையாகப் படிப்பதற்கு கடந்த இரண்டு மாதங்கள் நேரம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் கடந்த 21-01-2018 ஞாயிறு அன்று அவர்களுக்கு 60 மதிப்பெண்கள் அடங்கிய வினாத்தாள் கொண்ட தேர்வு வைக்கப்பட்டது. இந்தத் தேர்வில் 31 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் 7 மாணவர்களும், 24 மாணவிகளும் அடங்குவர். இந்தத் தேர்வு ரஹ்மத்துல்லாஹ் ஹஜ்ரத், ஸுஜா ஹஜ்ரத், ஷாகுல் ஷமீது ஹஜ்ரத் மற்றும் அப்துஷ் ஷுக்கூர் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது. ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி ரெஜிஸ்ட்ரேசன் நம்பர்கள் வழங்கப்பட்டு தம்பிபட்டி பள்ளிவாசல் மேல் வளாகத்தில் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வில் வெற்றி பெறும் நபருக்கு முதல் பரிசாக ஒரு கிராம் தங்கம் வழங்கப்பட இருக்கின்றது. அதே போல் இரண்டாம், மூன்றாம் நபர்களுக்கும், தேர்வில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட இருக...