2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு
இந்த வருடத்திற்கான ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் ரமலான் பெருநாள் அன்று (16-06-2018) இரவு இஷா தொழுகைக்குப் பின்பு தம்பிபட்டி பள்ளிவாசலில் வைத்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள் உட்பட 62 மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சகோ. இல்யாஸ் அவர்கள் தேர்தல் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். மன்றத்தின் துணைத் தலைவர் சகோ. அப்துஷ் ஷுக்கூர் அவர்கள், இந்த ஓராண்டு காலத்தில் மன்றத்தின் மூலம் செய்யப்பட்ட நற்பணிகள் குறித்து விரிவாக விளக்கினார். மன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகள், விமர்சனங்களுக்கு மன்றத்தின் தலைவர் சகோ. ஞானியார், மன்றச் செயலாளர் சகோ. முஹம்மது யாஸிர் மற்றும் மன்றப் பொருளாளர் சகோ. சிக்கந்தர் ஆகியோர் விளக்கம் அளித்தனர். மேலும் மாதச் சந்தா குறித்தும் உறுப்பினர்கள் மத்தியில் நினைவூட்டப்பட்டது.
அடுத்ததாக, இதுவரை எந்தவொரு நாமினேசனும் இதுவரை வராததால், அங்கே குழுமியிருந்த மன்ற உறுப்பினர்களிடமும் நேரடியாக கீழ்க்கண்ட பொறுப்புகளுக்கு நாமினேசன் கேட்கப்பட்டது.
1. தலைவர்
2. செயலாளர்
3. பொருளாளர்
ஆனால் யாரும் முன்வராத காரணத்தால், தேர்தல் ஒருங்கிணைப்பாளர் குழுமியிருந்த உறுப்பினர்களிடம் 'தலைவர்' பதவிக்கு 5 நபர்களின் பெயர்களை முன்மொழியுமாறு கேட்டார். அதனடிப்படையில் கீழ்க்கண்ட 5 நபர்கள் 'தலைவர்' பதவிக்கு போட்டியிட உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டனர்.
1. தாஜ் தீன்
2. முஹம்மது யூஸுஃப்
3. அப்துஷ் ஷுக்கூர்
4. முஜீபுர் ரஹ்மான்
5. ஷம்சுத்தீன்
அதேபோல கீழ்க்கண்ட நபர்கள் 'செயலாளர்' பதவிக்கு உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டனர்.
1. சிக்கந்தர் (மதுரை)
2. சிக்கந்தர் (கும்பகோணம்)
3. பீர் முஹம்மது
4. ஞானியார்
5. SP நூர் முஹம்மது
அதேபோல கீழ்க்கண்ட நபர்கள் 'பொருளாளர்' பதவிக்கு உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டனர்.
1. அஹமது நஸீர்
2. முஹம்மது யாஸிர்
3. பாதுஷா
4. ஜாஹிர் உசேன்
5. யஹ்யா
பின்னதாக, ஒவ்வொரு உறுப்பினரிடமும் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு மேற்குறிப்பிட்ட ஐந்து ஐந்து நபர்களிலிருந்து நீங்கள் விரும்பும் நபர்களை எழுதித் தரச்சொல்லி ஒரு துண்டுச்சீட்டு வழங்கப்பட்டது. எழுதி முடிக்கப்பட்ட துண்டுச்சீட்டுகள் ஓட்டுப் பெட்டியில் போடப்பட்டன. இறுதியாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை மேற்பார்வையிட்டு வாக்குகளை சரிபார்த்தவர் சகோ. ஷம்சுத்தீன்.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த இடைவெளியில் O.M.காஜா முஹ்யித்தீன் ரப்பானி ஹஜ்ரத் அவர்கள் இளைஞர்கள் மத்தியில் சிறிதுநேரம் உரையாற்றினார்கள்.
பின்னர் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் சகோ. இல்யாஸ் அவர்கள் தேர்தல் முடிவுகளை அறிவித்தார். அதில் 2018-2019 ஆம் வருடத்திற்கான தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்பிற்கு கீழ்க்காணும் நபர்கள் பெரும்பான்மையான வாக்குகள் பெற்றனர்.
1. தலைவர் - சகோ. அப்துஷ் ஷுக்கூர்
2. செயலாளர் - சகோ. மௌது ஞானியார்
3. பொருளாளர் - சகோ. முஹம்மது யாஸிர்
முடிவுகள் அறிவிக்கப்படவுடன் தேர்வு செய்யப்பட்ட பொறுப்புதாரிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட பொறுப்புதாரிகளிடமிருந்து ஒரு விமர்சனமும் கோரிக்கையும் வைக்கப்பட்டது.
ஏற்கனவே ஒரு பொறுப்பில் இருந்தவர்கள் இரண்டு வருடத்திற்கு அதே பொறுப்பிற்கு வரமுடியாது' என்ற பைலா விதியைத் திருத்தி, 'இரண்டு வருடத்திற்கு எந்தப் பொறுப்பிற்கும் வர முடியாது' என்று மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படது. ஏனென்றால், கடந்த வருடம் துணைத் தலைவராக இருந்தவர் இந்த வருடம் தலைவர், கடந்த வருடம் தலைவராக இருந்தவர் இந்த வருடம் செயலாளர் மற்றும் கடந்த வருடம் செயலாளராக இருந்தவர் இந்த வருடம் பொருளாளர் என ஒரே ஆட்கள் மீண்டும் மீண்டும் பதவியில் அமர்வது சரியாக இல்லை என்ற விமர்சனம் தற்போதைய தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளால் முன்வைக்கப்பட்டது. மேலும் புதிய ஆட்கள் ஒவ்வொரு வருடமும் நிர்வாகத்திற்குள் வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இது குறித்து பின்னர் ஆலோசிக்கலாம் என்று தேர்தல் ஒருங்கிணைப்பாளரால் அறிவிக்கப்பட்டது.
பின்னதாக, தலைவர் சகோ. அப்துஷ் ஷுக்கூர் அவர்கள், தனக்கான துணைத் தலைவராக சகோ. பாதுஷா (அக்ரி) அவர்களை நியமித்துக் கொண்டார்.
செயலாளர் சகோ. மௌது ஞானியார் அவர்கள், தனக்கான துணைச் செயலாளராக சகோ. ஷம்சுத்தீன் அவர்களையும் இணைச் செயலாளராக சகோ. ஹாரிஸ் (கி.புரம்) அவர்களையும் நியமித்துக் கொண்டார்.
பொருளாளர் சகோ. முஹம்மது யாஸிர் அவர்கள், தனக்கான துணைப் பொருளாளராக சகோ. ஷேக் (S/o மைதீன் பாவா) அவர்களையும் இணைப் பொருளாளராக சகோ. சிக்கந்தர் பாதுஷா (மதுரை) அவர்களையும் நியமித்துக் கொண்டார்.
பின்னதாக, உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் கீழ்க்காணும் நபர்கள் ஒருமனதாக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களால் தேர்வுசெய்யப்பட்டனர்.
1. சகோ. ஜாஹிர் உசேன்
2. சகோ. இல்யாஸ்
3. சகோ. தாஜ்தீன்
4. சகோ. அபூதாஹிர்
5. சகோ. ஷாஜஹான் (சவூதி)
6. சகோ. வலியுல்லாஹ் (கி.புரம்)
7. சகோ. சித்தீக் (பால் வியாபாரம்)
8. சகோ. சிக்கந்தர் (கும்பகோணம்)
9. சகோ. யஹ்யா (கி.புரம்)
உயர்மட்டக் குழுவின் அதிகாரம்:
எந்தவொரு செயலும் உயர்மட்டக்குழுவின் ஒப்புதலுக்குப் பின்பே செய்ய அனுமதிக்கப்படும்.
இறுதியாக 'இஸ்திகாரா' துஆ ஓதி ஆலோசனைக் கூட்டம் நிறைவுற்றது.
எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றாமல் ஆலோசனைக் கூட்டம் நிறைவுற்றது குறித்து உறுப்பினர்களிமிருந்து கூட்டம் நிறைவுற்ற பின்பு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மேலும் கிருஷ்ணாபுரம் ஊருக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படன. இன்ஷா அல்லாஹ் இந்த நிர்வாகத்தின் முதல் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்கப்பட்டு சுமூக முடிவெடுக்கப்படும் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகம் திறம்பட செயல்பட அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
HIYWA - MTK Puram
Comments
Post a Comment