மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

Hidhayathul Islam Youth Welfare Association (HIYWA)

ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்

சிறிதுகாலம் செயல்படாமல் இருந்த நமதூரின் இளைஞர் நற்பணி மன்றம், இந்த மாதத்திலிருந்து புத்தாக்கம் பெற்று செயல்படத் துவங்கியிருக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த பள்ளிவாசல் திறப்புவிழா அன்று இரவு, மகாராஜபுரம் பள்ளிவாசலில் வைத்து நடந்த இளைஞர்கள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. ஏற்கனவே நமதூரில் பணத்தோட்டம் ஷம்சுதீன் மற்றும் ஜாஹீர் தலைமையில் செயல்பட்டு வந்த ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சில ஆண்டுகளாக செயல்படாமல் கிடப்பில் இருந்தது. அதனை மீண்டும் துவக்கி, அதன் மூலம் நமதூருக்குத் தேவையான நற்பணிகளை முன்பு போல் மேற்கொள்ள வேண்டும்.

2. இயக்கம், அமைப்புகளைக் கடந்து நமதூர் இளைஞர்கள் ஒரு குடையின் கீழ் நின்று செயலாற்ற இந்த மன்றம் உறுதுணையாக இருக்கும்.

3. குறிப்பாக நமதூரில் உள்ள மாணவர்களின் கல்வி சார்ந்த உதவிகள் இந்த மன்றத்தின் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.

3. மன்றம் செயல்படுவதற்கு முக்கியமான தேவை 'நிதி'. ஆகையால் வேலை செய்யும் இளைஞர்களுக்கு மாதாந்திர நன்கொடை நிதியாக ரூபாய் ₹100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் பயிலும் மாணவர்களும் இந்த மன்றத்தில் செயலாற்ற வேண்டும் அடிப்படையில், அவர்களுக்கு மாதம் ₹30 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதா மாதம் கொடுப்பவர்கள் கொடுக்கலாம் அல்லது முழு வருடத்திற்கான மொத்த தொகையையும் ஒரே நேரத்தில் கொடுக்கலாம். உங்கள் விருப்பம்.

4. நிதி கணக்கு வழக்கு பொறுப்பை கையாள ஸ்ரீவில்லிபுத்தூரில் அஸிஸ்டன்ட் ஆடிட்டராகப் பணிபுரியும் 'ஜக்கரியா' விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கணக்கு வழக்கை மேற்பார்வியிடும் பொறுப்பு அப்துஷ் ஷுக்கூரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

5. மன்ற ஒருங்கிணைப்பு பொறுப்பு யாஸிரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

6. உள்ளூரில் வசூல் செய்யும் பொறுப்பு சாதிக் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகிய இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெளியூரில் உள்ளவர்கள் நேரடியாக ஜக்கரியாவின் வங்கிக் கணக்கில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட தீர்மானங்கள் நமதூர் இளைஞர்களுடன் செய்யப்பட்ட மசூராவின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை.

இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் மாதம் ₹100 மற்றும் ₹30 ரூபாய் கொடுக்க முழு மனதோடு சம்மதம் தெரிவித்த நபர்கள் கீழே..

1. ஞானியார்
2. ஷாஜஹான் (சவூதி)
3. அப்துஷ் ஷுக்கூர்
4. மைதீன் (சவூதி)
5. யாஸிர்
6. துவான் (பண்ணையார்)
7. இல்யாஸ் (கத்தார்)
8. பீர் (கட்ஸ்)
9. ஜியாவுதீன் (சதாம் தம்பி)
10. ஷேக் (அக்ரி)
11. அஸார் (சென்னை)
12. ஜக்கரியா
13. ஷேக் (S/o அய்யூப்)
14. குத்புதீன் (பெங்களூர்)
15. பாதுஷா (சென்னை)
16. பாதுஷா (அக்ரி)
17. ஷேக் (S/o அக்பர்)
18. ஷேக் (S/o உசேன்)
19. மன்சூர் (வக்கீல்)
20. அப்துல் குத்தூஸ்
21. சிக்கந்தர் (சென்னை)
22. ஆதம் போலீஸ்

இந்த மன்றத்திற்கென ஒரு வாட்ஸப் க்ரூப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு மேற்கண்ட நபர்கள் அதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நீங்களும் இந்த மன்றத்தில் இணைந்து செயலாற்ற விரும்புபவர்கள், ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்டு தெளிவு பெற்றபின் இணைந்து கொள்ளுங்கள்.

முழு மனதோடு நீங்கள் விரும்பினால் மட்டும் இணைந்து கொள்ளலாம். எந்த நிர்பந்தமும் கிடையாது.

இணைய விருப்பமுள்ளவர்கள் 'ஆம்' என்று ரிப்ளை செய்யுங்கள் அல்லது கீழ்க்கண்ட வாட்ஸப் லிங்கை பயன்படுத்தி நேரடியாக இணைந்து கொள்ளுங்கள்!

https://chat.whatsapp.com/HoWmg1XTDUS5Fb5AxcjVU4

இவண்.,
மன்ற ஒருங்கிணைப்புக் குழு

Comments

Post a Comment

Popular posts from this blog

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA