தம்பிபட்டி பள்ளிவாசல் திறப்பு விழா

அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தம்பிபட்டி ஜும்ஆ பள்ளிவாசலினுடைய திறப்புவிழா நிகழ்ச்சி செப்டம்பர் 4, 2017 அன்று சிறப்பாக நடந்து முடிந்தது!

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

விழா சரியாக 9 மணிக்கு ஆரம்பம் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக விழாவிற்கு வருகைதரும் அனைவருக்கும் குளிர்பானங்கள் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக மௌலவி ஜஃபருல்லாஹ் மிஸ்பாஹி அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள்.

பின்பு மௌலவி அப்துர் ரஹீம் ஃபைஜி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

அதன் பிறகு தம்பிபட்டி பள்ளிவாசலினுடைய இமாம் மௌலவி ஸுஜா அஹமது ஃபாஜில் மன்பஈ அவர்கள் சிறிது நேரம் துவக்க உரை ஆற்றினார்கள்.

பின்பு மகாராஜபுரம் பள்ளிவாசலினுடைய இமாம் மௌலவி ஷாகுல் ஹமீது ஃபைஜி அவர்கள் சிறிது நேரம் துவக்க உரை ஆற்றினார்கள்.

அதன் பிறகு நமது மூன்றூர் ஜமாஅத்தின் தலைவர் ஹாஜி மதார் முஹைதீன் அவர்கள் இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று சிறிது நேரம் உரையாற்றினார்கள்.

பேரையூர் ஜமாஅத்திலிருந்து வருகை தந்திருந்த ஜமாஅத்தின் தலைவர் ஹாஜி ஷர்புதீன் அவர்களும் பேரையூர் பள்ளிவாசலில் நெடுங்காலமாகப் பணியாற்றும் மௌலவி முஹம்மது அலி பாகவி அவர்களும் சிறிது நேரம் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பின்பு, நமதூரில் உள்ள பல இமாம்களுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்த மௌலவி நெல்லை ஜமால் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறிது நேரம் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பின்பு சரியாக 10:30 மணியளவில் மௌலவி O.M. அப்துல் காதிர் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்களால் பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டது. அனைவரும் காணிக்கைத் தொழுகையாக இரண்டு ரக்கத் தொழுதுவிட்டு நிகழ்ச்சி மீண்டும் துவங்கியது.

பின்பு நிகழ்ச்சி ஒரு இனிமையான கீதத்துடன் துவங்கியது. மகவை மௌலவி O.M. முஹம்மது முஹைதீன் பாகவி அவர்கள் "எங்கள் யா நபி! எங்கள் யா ஹபீப்" என்ற கீதத்தை அருமையாகப் பாடி நிகழ்ச்சியை மீண்டும் துவக்கி வைத்தார்.

அடுத்ததாக கறம்பக்குடி பத்ரிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலவி ஸதக்கத்துல்லாஹ் உலவி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

அடுத்ததாக வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி O.M. அப்துல் காதிர் பாகவி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

பின்பு சென்னை அடையாறு பள்ளிவாசலின் தலைமை இமாம் நாடறிந்த பேச்சாளர் மௌலானா மௌலவி சதீதுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். நேரம் குறைவாக இருந்ததால் சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டார்கள்.

அதன் பிறகு இறுதி சிறப்புரையாக, சமூக ஆர்வலர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் 'ஆளூர் ஷா நவாஸ்' அவர்கள், 'சமூகக் கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பில் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சமூகக் கருத்துக்களை சிறப்பான முறையில் எடுத்து வைத்து உரை நிகழ்த்தினார்கள்.

அதன் பின்பு, இந்தப் பள்ளிவாசல் கட்டுவதற்கு நன்கொடை அளித்தவர்கள், சிறப்புப் பேச்சாளர்கள், முன்னாள் தலைவர்கள், மூத்த உலமாக்கள், துடிப்பான இளைஞர்கள் அனைவருக்கும் ஜமாஅத் சார்பாக பொன்னாடை போத்தி கௌரவிக்கப்பட்டது.

இறுதியாக ஹஜ்ரத் கிப்லா O.M. அப்துல் காதிர் பாகவி அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நடைபெற்று முடிந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!

லுஹர் தொழுகைக்குப் பின்பு, விழாவில் கலந்துகொண்ட உள்ளூர் வெளியூர் மக்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் விருந்து அளிக்கப்பட்டது. சாப்பாடு பரக்கத்தாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!


விழா குறிப்புகள்:
•••••••••••••••••••••••••

* சொந்த அலுவல் காரணமாக இவ்விழாவிற்கு வர இயலாத நமதூர் மக்களுக்காக மற்றும் வெளிநாடு வாழ் மகவை மக்களுக்காகவும் முழு நிகழ்ச்சியையும் வீடியோ கவரேஜ் செய்யப்பட்டு CD போடப்பட்டுள்ளது. மேலும் YouTube லும் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பான்சர் செய்தவர் சகோ. இல்யாஸ், கத்தார்.

* பெண்கள் பகுதியில் LCD திரை அமைக்கப்பட்டு, நிகழ்ச்சியை live ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

* முழு நிகழ்ச்சியையும் ஃபோட்டோ எடுக்கப்பட்டு ஆல்பம் போடப்பட்டு பள்ளிவாசல் ஜமாஅத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

* விழாவிற்கு முதல் நாளே ஒரு மீட்டிங் போட்டு இன்னார்க்கு இன்னன்ன பொறுப்புகள் என்று பிரித்துக் கொடுக்கப்பட்டு அணிகளாக செயல்பட்டனர். குளிர்பானம் தயாரிக்கும் அணி, குளிர்பானம் விநியோக அணி, அமைதிப்படுத்தி அமர வைக்கும் அணி, வரவேற்பு அணி, பந்தி பரிமாறும் அணி மற்றும் இலை எடுக்கும் அணி என பிரிக்கப்பட்டனர்.

* இந்த விழாவில் கூமாப்பட்டி, தும்மநாயக்கன்பட்டி, பேரையூர், பட்டியக்கல், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் இருந்து வந்து கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

* நமதூரில் உள்ள சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இது மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது.

இனி இதுபோன்ற பள்ளி திறப்பு விழா நிகழ்வு எந்தத் தலைமுறையில் நடக்க இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நம்முடைய தலைமுறையில் நமதூரில் நடந்து முடிந்த இந்த நிகழ்வு சிறப்பான ஒன்று. வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. நமது நினைவுகளில் என்றும் இருக்கப்போகும் நிகழ்வு!


இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவை ஏற்பாடு செய்த ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகள், குறிப்பாக உலமாக்கள், மூன்றூர் இளைஞர்கள் மற்றும் SDPI & PFI தோழர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

ஆமீன்


Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA