வாராந்திர மஷூரா - 1 (20-10-2017)

மன்றத் தலைவரின் அறிவுரையின்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு மன்ற நிர்வாகிகளின் மசூரா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று வெள்ளிக்கிழமை (20-10-2017) இரவு 10 மணிக்கு, மன்ற நிர்வாகிகளுக்கென இயங்கும் வாட்ஸப் குழுமத்தில் நடைபெற்ற மசூராவில் கீழ்க்கண்ட மன்ற நிர்வாகிகளும் ஆலோசகர்களும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தனர்.

1. மௌது ஞானியார் (தலைவர்)
2. அப்துஷ் ஷுக்கூர் (துணைத் தலைவர்)
3. முஹம்மது யாஸிர் (செயலாளர்)
4. இல்யாஸ் (மூத்த ஆலோசகர்)
5. அஸாருதீன் (மன்ற ஆலோசகர்)

மசூராவில் விவாதிக்கப்பட விசயங்கள்:

1. இதுவரை HIYWA மன்றத்தில் இணையாத நமது ஊரைச் சேர்ந்த விடுபட்ட இளைஞர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களிடம் மன்ற செயல்பாடுகளைப் பற்றி எடுத்துச் சொல்லி இந்த மன்றத்தில் இணையுமாறு வேண்டுகோள் விடுப்பது.

2. கூடிய விரைவில் மன்றத்தை ரெஜிஸ்ட்ரேசன் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கான முயற்சியை மன்றத் துணைத் தலைவர் அப்துஷ் ஷுக்கூர் மேற்கொள்வதாக உறுதியளித்திருக்கிறார்.

3. மன்றம் ரெஜிஸ்ட்ரேசன் ப்ராஸஸ் முடிந்ததும், இன்ஷா அல்லாஹ் பெரிய அளவில் "இலவச மருத்துவ முகாம்" நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

4. மன்றத்தின் அடுத்த நற்பணி, "ஊரை சுத்தப்படுத்துதல்". அதன் முன்னோட்டமாக வரும் ஞாயிறு (22-10-2017) அன்று மகாராஜபுரம் தம்பிபட்டி கிருஷ்ணாபுரம் ஆகிய மூன்று ஊர்களில் உள்ள தெருக்களை உள்ளூர் உறுப்பினர்களை வைத்து கள ஆய்வு செய்வது எனவும் அதற்கு அடுத்த வாரம் (29-10-2017) சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தூய்மை சம்பந்தமான பிட் நோட்டிஸ் விநியோகம் மற்றும் மெகாஃபோன் பரப்புரையும் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ் நம்முடைய நல்ல எண்ணங்களை நிறைவேற்றி வைப்பானாக!

இவண்

ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் - (HIYWA)
MTK புரம்

Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA