இந்த வார மஷூரா டாப்பிக் (27-10-2017)
ஒவ்வொரு அமைப்பும்/இயக்கமும் செயல்படத் துவங்கும் முன் அந்தந்த அமைப்பின்/இயக்கத்தின் விதிமுறைகள் (பைலா) வகுக்கப்படும். பைலாவின் அடிப்படையில் அந்த அமைப்பு/இயக்கம் கட்டமைக்கப்படும். அதன் பின்புதான் அந்த அமைப்பு செயல்படத் துவங்கும். ஆனால் நாம் மன்றத்தின் பைலாவை முழுமையாக கட்டமைப்பதற்கு முன்பே நற்பணிகள் செய்யத் துவங்கி விட்டோம். பரவாயில்லை. நற்பணிகள் ஒருபுறம் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டே இருந்தாலும், ஒவவொரு வாரமும் நடைபெற இருக்கும் மசூராவில் பைலா சம்பந்தமான ஒரு தலைப்பில் விவாதித்து நம் மன்றத்தை கட்டமைப்பது அவசியமாகும். அதனடிப்படையில் வருகின்ற வெள்ளிக்கிழமை (27-10-2017) இரவு 10 மணிக்கு நடைபெற இருக்கும் வாட்ஸப் மசூராவில் கீழ்க்கண்ட தலைப்பில் விவாதிப்போம் என மன்றத் தலைவர் அறிவுறித்தியுள்ளார்.
"மன்றப் பொருளாளரின் வரையறை"
இந்தத் தலைப்பின் கீழ்,
1. மன்றப் பொருளாளரின் அதிகாரம் என்ன?
2. அவர் எவ்வாறு செயல்பட வேண்டும்?
3. கணக்கு வழக்குகள் எவ்வாறு பதிவு செய்யப்பட வேண்டும்?
4. கணக்கு வழக்குகளை எப்போது சமர்ப்பிக்க வேண்டும்?
5. துணைப் பொருளாளரின் வரையறை என்ன?
6. இன்னும் பல..
ஆகியவற்றைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம்.
மேலும், இந்த வாரம் நாம் செய்ய இருக்கின்ற சுகாதார நற்பணிகள் (விழிப்புணர்வு &பரப்புரை) குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. உங்களுடைய கருத்துக்களை தயார் செய்து கொண்டு வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் இந்த மசூராவின் ஒருங்கிணைப்பாளராக திவான் மைதீன் (துபாய்) அவர்கள் செயல்படுவார்கள்.
ஒருங்கிணைப்பாளரின் பணிகள்:
1. மஷூரா நாளன்று இந்த மஷூராவைப் பற்றி நினைவூட்டுவது.
2. நிர்வாகிகள் குழுமத்தில் உள்ள அனைவரையும் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு, யார் யார் இந்த மஷூராவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்று உறுதிசெய்து கொள்வது.
3. மஷூரா துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை நினைவூட்டுவது.
4. மஷூராவின் விதிமுறைகளை எடுத்துச் சொல்லி சரியான நேரத்தில் மஷூராவை துவங்கி வைப்பது மற்றும் முடித்து வைப்பது.
அல்லாஹ் இந்த மஷூராவை பயனுள்ளதாக ஆக்கி வைப்பானாக! ஆமீன்!
இவண்
முஹம்மது யாஸிர்
மன்றச் செயலாளர், HIYWA
Comments
Post a Comment