5 வருடச் சந்தாவை ஒரே தவணையில் செலுத்திய ராம்ராஜ் ஒலியுல்லாஹ்

ராம்ராஜில் பணிபுரியும் அண்ணன் ஒலியுல்லாஹ் அவர்கள், ஐந்து வருடத்திற்கான சந்தா தொகையை ஒரே தவணையில் கட்ட ஆசைப்படுகிறேன் என முன்பே என்னிடம் (யாஸிர்) தெரிவித்திருந்தார். சொன்னது போலவே இன்று ஐந்து வருடத்திற்கான   தொகையை (₹6000) ஒரே தவணையில் செலுத்தி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
மாஷா அல்லாஹ்!
ஊர் சம்பந்தமான எந்த நற்காரியமாக இருந்தாலும் ஆர்வத்தோடு பங்களிப்புச் செய்பவர்களில் ஒலியுல்லாஹ்வும் ஒருவர். நமதூரில் வருடா வருடம் நடைபெறும் HPL போட்டிகளில் வீரர்களை ஊக்குவிக்க பல்வேறு பரிசுப்  பொருட்களை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்லாஹ் அவருடைய நல்ல எண்ணங்களை நிறைவேற்றி வைப்பானாக! மேலும் அவருடைய தொழிலில் மென்மேலும் அபிவிருத்தியை வழங்குவானாக!
ஆமீன்..!
ஒலியுல்லாஹ் அவர்களின் வரிகள்..

"எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகும்.
அல்ஹம்துலில்லாஹ்,
நான்  கூறியதுபோல் நமதூரின் நற்பணிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட, ஹிதாயத்துல் இஸ்லாம் நற்பணி மன்றத்திற்கு ஐந்து வருடத்திற்கான சந்தா தொகையினை முன் கூட்டியே செலுத்தி விட்டேன் என்பதனை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
ஐந்து வருடத்திற்கான சந்தா தொகையை முன்கூட்டியே கட்டிவிட்டதால், இனி எந்த வேலையும் இல்லை என நினைத்துவிட வேண்டாம்.
இன்ஷா அல்லாஹ் சங்கத்திற்கு நிதி தேவைப்படும்போது என்னால் அவ்வப்போது முடிந்த உதவிகளை செய்து கொண்டே இருப்பேன் என்பதை கூறிக்கொள்கிறேன்.
இன்னும் அதிகமாக நிதிஉதவி வழங்கிட, எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய அனைவருக்கும் துஆ செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்"
இப்படிக்கு
ஒலியுல்லாஹ்
ராம்ராஜ், சென்னை

Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA