HIYWA மன்றத்தின் நற்பணி - நோயாளிகளை நலம் விசாரித்து பால் ரொட்டி வழங்குதல்

நிர்வாகக் குழுவில் மஷூரா செய்ததன் அடிப்படையில் இன்று (ஞாயிறு 19-11-2017) மன்றம் சார்பாக, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளைச் சந்தித்து நலம் விசாரிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு பால் மற்றும் ரொட்டி வழங்கப்பட்டு ஆறுதலான வார்த்தைகள் சொல்லப்பட்டது. ஓரிறைக் கொள்கையைப் பற்றியும் அவர்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!

இந்த நற்பணி மன்ற மூத்த ஆலோசகர்கள்  தலைமையில், மன்ற துணைத் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாகச் செய்யப்பட்டது.

அரசு மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் நமது நற்பணியை மிகவும் பாராட்டினர். இன்னும் இதே போன்ற நற்பணிகளை மேற்கொள்ளுங்கள் என மன்ற நிர்வாகிகளை ஊக்கப்படுதினர்.

இந்த நற்பணியில் கலந்துகொண்டவர்கள்:

மன்றத்தின் மூத்த ஆலோசகர்கள்:

1. சகோ. அமீர்
2. சகோ. ஷம்சுத்தீன்

சகோ. திவான் மைதீன் (மன்ற ஆலோசகர்)

சகோ. அப்துஷ் ஷுக்கூர் (மன்ற துணைத் தலைவர்)

செயற்குழு உறுப்பினர்கள்:

1. அப்துல் குத்தூஸ்
2. அஸாருத்தீன்
3. ஷேக் அக்ரி
4. ஷேக் மைதீன் பாவா

மன்ற மாணவரணி உறுப்பினர்கள்:

1. தாஜ்தீன்
2. ஷேக்
3. ஜாவித்
4. அலிபாதுஷா
5. அப்துல்லாஹ்
6. ஃபக்ருதீன்
7. ஃபரீத்்

இந்த நற்பணியில் கலந்துகொண்டு செயலாற்றிய அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக! மேலும் வருங்காலங்களில் நடக்க இருக்கும் நற்பணிகளிலும் பங்கெடுத்து செயலாற்றுமாறு மன்றத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இப்படி ஒரு நற்பணி மன்றத்தின் சார்பாக செய்யப்போகிறோம் என்று அறிவிப்புச் செய்தவுடன், பலர் ஸ்பான்சர் செய்ய முன்வந்தார்கள். அவர்களுடைய வியாபாரத்திலும் தொழிலிலும் பரக்கத் செய்வானாக!

பாலுக்கு ஸ்பான்சர் செய்தவர்கள்:

1. சகோ. அசன் - 5 லிட்டர்
2. சகோ. கான் - 5 லட்டர்
3. சகோ. ஷம்சு - 3 லிட்டர்

ரொட்டி ஸ்பான்சர் செய்தவர்:

சகோ. திவான் மைதீன் (துபாய்)

ஆட்டோ ட்ரிப் ஸ்பான்சர் செய்தவர்:

சகோ. முஹம்மது தாரிக்

இந்த நற்பணிக்காக ஸ்பான்சர் செய்த மற்றும் பங்கெடுத்து களத்தில் செயலாற்றிய  அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!
மேலும் இதுபோன்ற நற்பணிகளை மன்றத்தின் சார்பாக தொடர்ச்சியாக செய்வதற்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!
ஆமீன்!

இவண்

மௌது ஞானியார்,
மன்றத் தலைவர், HIYWA





































Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA