கல்வி வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வழிகாட்டி நிகழ்ச்சி

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால், நமது HIYWA மன்றம் சார்பாக, உங்களின் பெரும் பங்களிப்போடு பல்வேறு நற்பணிகளை நமது ஊர்களில்  மேற்கொண்டு வருகிறோம். HIYWA மன்றம் மீண்டும் துவக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களில் டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு, நிலவேம்புக் கசாயம் வழங்குதல், சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம், அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து பால் மற்றும் பிஸ்கட் வழங்குதல் போன்ற நற்பணிகளை நாம் தொடர்ந்து செய்து வருகிறோம்.

அதனடிப்படையில், இன்ஷா அல்லாஹ் வரும் 24-12-2017 ஞாயிறு அன்று தம்பிபட்டி பள்ளிவாசல் மேல்தளத்தில் வைத்துச், கல்வி வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வழிகாட்டி நிகழ்ச்சி, மன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமதூர் மட்டுமல்லாமல், கூமாப்பட்டி மற்றும் தும்மநாயக்கன்பட்டி மாணவ மாணவியர்கள் மற்றும் பெண்களுக்காகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் அமர்வில், பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் அமர்வில், அரசுத் தேர்வுகளுக்கு தங்களை தயார்செய்துகொண்டிருக்கும் மாணவ மாணவியர்களுக்கு, அரசுத் தேர்வுகளில் சாதித்தவர்களை வைத்து வழிகாட்டும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிள்ளது.

மூன்றாவது அமர்வில் பெண்கள் சுயமாக சிறு தொழில்கள் தொடங்குவதற்கான யோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அமர்விற்கும் அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் சிறப்புப் பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நிகழ்ச்சி காலை 9 மணியிலிந்து மாலை 5 மணி வரை நடைபெற இருக்கின்றது. கூமாப்பட்டி மற்றும் தும்மநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளியூர் மாணவ மாணவியர்களுக்கு மதிய உணவு மன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றது. நீங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உங்களுடைய கூமாப்பட்டி மற்றும் தும்மநாயக்கன்பட்டி நண்பர்களுக்கும் இதைத் தெரியப்படுத்தி இந்த நிகழ்ச்சியில் அவர்களையும் பங்குகொள்ளச் செய்து பயனடையுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் (HIYWA) - MTK புரம்

Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA