பொது e-சேவை முகாம் - HIYWA
இந்த மாதம் 11-2-2018 அன்று மகாராஜபுரம் பள்ளிவாசலில் வைத்து நடைபெற்ற HIYWA மன்றத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், 25-02-2018 அன்று நமது ஊரில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் 'பொது e-சேவை முகாம்' நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் நேற்று இந்த முகாம், நமது மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களால் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
இந்த முகாமில், ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பது, ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல், ஒரிஜினல் டாக்குமெண்ட்கள் நகலெடுத்தல், லேமினேட் செய்தல், புகைப்படம் எடுத்தல் ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக செய்து கொடுக்கப்பட்டது. காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட முகாம் இரவு 8 மணி வரை நடைபெற்றது.
இந்த முகாம் நடைபெறுவதற்குத் தேவையான உபகரணங்கள் வழங்கியது மட்டுமல்லாமல், ஒருநாள் முழுக்க முகாமில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்த 'ஸ்டார் மொபைல்ஸ்' சகோ. அய்யூப் கான் அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! இன்ஷா அல்லாஹ் நேற்று முகாமில் ஏற்பட்ட செலவுகளும், அவருடைய ஒருநாள் சம்பளமும் மன்றம் சார்பாக ஊக்கத்தொகையாக அவருக்கு வழங்கப்படும்.
மேலும் இந்த முகாம் நடைபெற உறுதுணையாக இருந்த மன்ற ஆலோசனைக் குழுத் தலைவர் சகோ. ஷம்சுத்தீன், மன்ற செயற்குழு உறுப்பினர்கள் சகோ. பாதுஷா (அக்ரி), சகோ. ஷேக் (அக்ரி), சகோ. அஸார், சகோ. சிக்கந்தர், சகோ. ஆதம், சகோ. ஷேக் மைதீன் பாவா, சகோ. ஷேக் அக்பர் மற்றும் சகோ. ஷேக் அய்யூப் ஆகியோர் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!
ஆமீன்!
மேலும் இதுபோன்ற நற்பணிகள் நமதூர் மக்களுக்காக அதிகமதிகம் செய்வதற்கும் அல்லாஹ் கிருபை செய்வானாக!
இவண்,
HIYWA - MTK Puram
முகாம நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவு உபகரணங்களை வைத்து ஒத்திகை பார்த்த போது
11-02-2018 அன்று நடைபெற்ற HIYWA மன்றத்தின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்
பொது e-சேவை முகாம் நடத்துவது சம்பந்தமாக 'ஸ்டார் மொபைல்ஸ்' சகோ. அய்யூப் கான் அவர்களை மன்ற நிர்வாகிகள் சந்தித்த போது









How to make money from betting on football - Work Tomake Money
ReplyDeleteIf you're having problems finding a winning bet online for the day of your choosing, then there หาเงินออนไลน์ are kadangpintar plenty of opportunities available wooricasinos.info right https://tricktactoe.com/ here.