பெண்கள் கழிப்பிடம் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்

பெண்களுக்கு கழிப்பிடம் கட்டுவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்று (15-07-2018, ஞாயிறு)தம்பிபட்டி பள்ளிவாசலில் வைத்து நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் பின்வருமாறு,

1. ஜனாப். மதார் முஹைதீன், ஜமாஅத் தலைவர்
2. ஜனாப். சாதிக் பாட்சா, கணக்காளர்
3. சகோ. ஷம்சுதீன், மன்ற துணைச் செயலாளர்
4. சகோ. ஜாஹிர் உசேன், உயர்மட்டக் குழு
5. சகோ. அபூதாஹிர், உயர்மட்டக் குழு
6. சகோ. அப்துஷ் ஷுக்கூர், மன்றத் தலைவர்
7. சகோ. பாதுஷா, மன்ற துணைத் தலைவர்
8. சகோ. ஷேக், மன்ற துணைப் பொருளாளர்
9. சகோ. ஜகுபர் சாதிக், தர்பியா ஒருங்கிணைப்பாளர்
10. சகோ. மைதீன், பணத்தோட்டம்
11. சகோ. அஹமது கான், கி.புரம்
12. சகோ. அப்துல் குத்தூஸ்
13. சகோ. சாதிக் (B.Tech)
14. சகோ. ரியாஸ், கி.புரம்
15. சகோ. துவான் மைதீன் (B.E Civil)
16. சகோ. சிக்கந்தர் (Nursing)
17. சகோ. ஷேக் (Physics)
18. சகோ. இம்ரான் ஃபரீத்
19. சகோ. ஷேக் முஹம்மது
20. சகோ. ஃபக்ருதீன்

ஆலோசனைக் கூட்டத்தில், மகாராஜபுரம் பள்ளிவாசல் வளாகத்தில் வட மேற்கில் உள்ள இடத்தில் கழிப்பிடம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்ததும் அந்த இடத்திற்கே சென்று ஆய்வு செய்யப்பட்டது. வடக்கு தெற்காக மொத்தம் 12 கழிப்பறைகள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த செலவு 3.5லிருந்து 4 இலட்சம் வரை ஆகும் என தோராயமாக கணக்கிடப்பட்டுளளது.

ஆகையால், நமதூர் இளைஞர் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை பொருளாகவோ அல்லது பணமாகவோ கொடுத்து உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் மற்றும் உங்கள் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களிடம் இதைப் பற்றி எடுத்துச் சொல்லுமாறும் கேட்டுக் கொள்கிறோம். இதுவொரு கூட்டு முயற்சி. அனைவரும் ஒன்றிணைந்து இந்த நற்பணியை (ஸதக்கத்துல் ஜாரியா - நிலையான தர்மம்) மேற்கொள்வோம்.

கழிப்பிடம் கட்டுவது சம்பந்தமாக இன்ஷா அல்லாஹ் ஜும்ஆவில் மக்களுக்கு அறிவிப்பு செய்யப்படும் என ஜமாஅத் தலைவர் கூறியுள்ளார்.

இவண்

HIYWA - MTKPuram


Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA