வாராந்திர தர்பியா - HIYWA

நேற்று (01-07-2018) மஃரிப் தொழுகைக்குப் பின்பு இஷா வரை, மகாராஜாபுரம் மதரஸாவின் மேல் தளத்தில் வைத்து உள்ளூர் (MTK Puram) மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 13 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சகோ. இல்யாஸ் (கத்தார்), மௌலவி ஷாகுல் ஹமீது ஹஜ்ரத், மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஹஜ்ரத் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்த முன்னோட்ட நிகழ்வில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

1. உள்ளூர் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மஃரிபிலிருந்து இஷா வரை தர்பியா ப்ரோக்ராம் நடத்துவது.

2. மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் (கால சூழ்நிலையைப் பொறுத்து) , காலை 10 மணியிலிருந்து லுஹர் வரை தர்பியா ப்ரோக்ராம் நடத்துவது.

3. ஒரு மாதத்தில் நான்கு வாரங்கள் உள்ளன. அதனடிப்படையில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பின் கீழ் தர்பியா நடத்துவது. தலைப்புகளும் வகுப்பு எடுப்பவர்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

அகீதா (கொள்கை விளக்கம்) - மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஹஜ்ரத்

சீறத் (வரலாறு) - மௌலவி ஸுஜா ஹஜ்ரத்

அக்லாக் (நற்பண்புகள்) - சகோ. அப்துஷ் ஷுக்கூர்

வாழ்வியல் நெறிகள் - சகோ. ஜாஃபர் ஸாதிக்

ஒவ்வொரு மாதமும் இந்தத் தலைப்புகளின் கீழ் தொடர்ச்சியாக தர்பியா வகுப்புகள் நடத்துவது.

4. வாராந்திர தர்பியா நிகழ்வுக்கு என ஒரு தனி வாட்ஸப் குழுமம் உருவாக்கப்பட்டு, அதில் உள்ளூர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைக்கப்படுவார்கள். அந்தக் குழுமம் மூலம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தர்பியா வகுப்பு குறித்து அவர்களுக்கு நினைவூட்டப்படும். இந்தப் பொறுப்பு சகோ. ஜாஃபர் ஸாதிக் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

படிப்பு, வேலை, விளையாட்டு மற்றும் செல்ஃபோன் மோகம் காரணமாக இஸ்லாத்தைப் பற்றிய அறிவு நம்மிடையே மிகவும் குறைந்துகொண்டே வரும் இந்தக் காலத்தில், இதுபோன்ற தர்பியா வகுப்புகள் அவசியமானதாகும். அதனடிப்படையில் ஹிதாயத் இளைஞர் மன்றம் (HIYWA) மற்றும் லஜ்னத்துல் இஹ்ஸான் உலமா சபை (LIU) சார்பாக நடத்தப்படவுள்ள இந்த தர்பியா வகுப்புகளில் வாரம் தவறாமல் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். உள்ளூரில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இதுவொரு மிகச்சிறந்த வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு மணிநேரம் இந்த வகுப்பிற்காக உங்கள் நேரங்களை ஒதுக்குங்கள்.

ஹிதாயத் எனும் நேர்வழியை அல்லாஹ் அனைவருக்கும் வழங்குவானாக!
மரணிக்கும் வரை தடம்புரளாமல் அதே நேர்வழியில் வாழ அருள்புரிவானாக!

ஆமீன்!

இவண்

HIYWA - MTK Puram







Comments

Popular posts from this blog

மீண்டும் துவங்கியது ஹிதாயத் மன்றம்

2018 - HIYWA நிர்வாகிகள் தேர்வு

பொது e-சேவை முகாம் - HIYWA